தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் நிலையாக நின்ற 101 மாடி கட்டடம்... காரணம் இது தான்...!
தாய்வானின் தலைநகர் தைபேயில் 101 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று நவீன பொறியியலின் ஆற்றலிற்கு சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.
உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இந்த தைபே 101 (Taipei 101) என்ற இந்தக் கட்டடமே அந்த சிறப்பை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கத்தில் இருந்து இந்தக் கட்டடம் தப்பியதற்காக தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
தாய்வான் நிலநடுக்கம்
இரண்டு நாட்களுக்கு முன் தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது, அதன் தீவிரத்தால் பல நகரங்களில் உள்ள பாரிய கட்டடங்களின் அடித்தளங்கள் குலுங்கின.
ஆனால் தைபே 101 மாடி கட்டிடத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, புதுமையான பொறியியல் கட்டுமானம் இந்த கட்டிடத்தை பூகம்பத்திலிருந்து தப்பிக்க வைத்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
87-92 மாடிகளுக்கு இடையில் ஒத்திசைவாக செய்யப்பட்ட mass damper எனப்படும் 730-தொன் எடைகொண்ட ஒரு பாரிய எஃகு கோளம் நிறுவப்பட்டுள்ளது.
எஃகு கோளம்
இந்த எஃகு கோளம் பூகம்பத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளின் விளைவை நடுநிலையாக்கும் என கூறப்படுகிறது.
இது கட்டிடத்தின் அசைவை 40 சதவீதம் வரை குறைத்து , அதன் குடியிருப்பாளர்களால் உணரப்படும் பதற்றத்தை குறைக்கும் என்று பொறியாளர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |