பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள தலிபான்- அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகளின் நிலை?
அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு தலிபான்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து அமெரிக்கர்களையும் ஆப்கானை விட்டு வெளியேற்ற ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஜோ பைடன் அவகாசம் கோரியிருந்தார்
இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அமெரிக்கா அல்லது பிரித்தானியா நீட்டித்தால் எதிர்விளைவுகளை சந்திக்கக்கூடும் என தலிபான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அனைவரையும் வெளியேற்ற மேலும் பதினைந்து நாட்கள் தேவை என்று பிரித்தானியா இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வெளிநாட்டுப் படைகள் ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு பின்னரும் நாட்டில் இருந்தால் எதிர்விளைவுகளை சந்திக்கக்கூடும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் டாக்டர் சுஹைல் ஷாஹீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜோ பைடன் ஓகஸ்ட் 31க்குள் அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
எனவே எந்த அவசியமும் இல்லாத போது, அமெரிக்கா அல்லது பிரித்தானியா வெளியேற்றத்தைத் தொடர கூடுதல் காலம் கேட்டால் தர மாட்டோம் எனவும் எதிர்விளைவுகளை சந்திக்கக்கூடும் எனவும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.