தலிபான்களுக்கு கொடுக்கப்பட்ட தக்க பதிலடி!!
நான் என் மண்ணில் தான் இருக்கிறேன், என் மண்ணின் கெளரவத்தை காக்க தொடர்ந்து போராடுவேன் என்று ஆப்கான் முன்னாள் துணை அதிபரும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் போராளி குழு தலைவருமான அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.
ஆப்கான் முன்னாள் துணை அதிபரும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கின் போராளி குழு தலைவருமான அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், தான் தம்பி ஓடவில்லை என்றும், தாய் நாட்டிலேயே இருப்பதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தலிபான்களுக்கு எதிரான எங்கள் எதிர்ப்பு தொடர்கிறது. நான் இங்கே என் மண்ணில் தான் இருக்கிறேன். என் மண்ணுக்காகவும் அதன் கெளரவத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மற்றொரு பதிவில், தலிபான்கள் பஞ்ஷிர் பகுதிக்கு பொருட்கள் வருவதை மனிதாபிமானமின்றி தடுத்துள்ளனர். இங்கு மக்கள் வருவதையும் தடுக்கிறார்கள். எங்கள் மண்ணில் ஆண்கள் துன்பப்படுத்தப்படுகின்றனர்.
தொலைபேசி, மின்சாரம் மற்றும் மருந்தை அனுமதிக்கவில்லை. மக்கள் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. தலிபான்கள் தொடர்ந்து போர் குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். தலிபான்கள் அவரது சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.