பாகிஸ்தான் சிதைந்துவிடும்-தலிபான்கள் கடும் எச்சரிக்கை
pakistan
taliban
imrhankhan
By Sumithiran
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐஎஸ்ஐ அமைப்பால் ஆட்டிவைக்கப்படும் கைப்பாவை என தலிபான்கள் காட்டமாக விமர்சித்துள்ளனர்.
உள்ளூர் செய்தித்தொலைக்காட்சிக்கு தலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அளித்த பேட்டியில், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கைப்பாவை. அத்தகைய அரசாங்கம் இஸ்லாமிய எமிரேட்ஸுக்கு (ஆப்கானிஸ்தான்) எதிராக தேசிய உணர்வுள்ள ஆப்கானியர்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறது.
இது அவர்களின் நோக்கங்களில் ஒன்றாகும்,
பாகிஸ்தான் சிதைந்துவிடும், ஏற்கனவே FATF அமைப்பினால் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
