பாகிஸ்தான் குண்டுவெடிப்பு -பொறுப்பேற்றது தலிபான்
Pakistan
Taliban
Death
By Sumithiran
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இன்று, பெஷாவர் நகரில் உள்ளா மசூதியில்,பிற்பகல் தொழுகையின்போது, பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
இதில், 59 பேர் பலியாகினர்,. 150 பேர் படுகாயமடைந்தனர்.
காவலர்களை குறிவைத்து தாக்குதல்
மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மசூதி பலத்த பாதுகாப்புடன் கூடிய காவல்துறை தலைமையக பகுதிக்குள் உள்ளது. இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும், ஆப்கானில் உமர் காலித் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி