அதிகரிக்கும் தலிபான்களின் அட்டூழியம் - தீயிலிடப்பட்ட இசைக் கருவிகள்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நேற்று (31) இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் தாலிபான்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, 2021 ஓகஸ்டில் இருந்து ஆட்சி அதிகாரம், தலிபான் பயங்கரவாத அமைப்பினர் வசமானது.
அன்றிலிருந்து தாலிபான்களால் பல தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
பெண்கள் தனியாக வெளியே செல்ல முடியாது, பாடசாலை, கல்லுாரிகளுக்கு செல்ல முடியாது, அழகு நிலையங்களில் பணிபுரிய முடியாது என்பன அவற்றுள் சிலவாகும்.
இசை நிகழ்ச்சிகளுக்குத் தடை
இதேபோல் இசை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவிற்கு அமைய, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட விழா நிகழும் இடங்களில் உள்ள கிட்டார், தபேலா மற்றும் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட இசைக் கருவிகள் தலிபான் அமைப்பினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே நேற்று ஹெராத் மாகாணத்தில், பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் தலிபான்களால் தீயிலிடப்பட்டது.