திருமண விழாவில் புகுந்து தலிபான்கள் துப்பாக்கிச் சூடு! மூவர் பலி
திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதால் அங்கு தலிபான்கள் புகுந்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அத்துடன் முந்தைய அரசில் இருந்த கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை போன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதில் திருமண விழா உள்ளிட்ட எங்கும் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்பது ஒன்றாகும். இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதால் அங்கு தலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.
நங்கர்ஹர் மாகாணம் சம்ஷ்பூர்மர் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த தலிபான்கள் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கும் போது,
திருமண விழாவில் துப்பாக்கிசூடு நடத்தியவர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.
ஒருவரை தேடி வருகிறோம். அவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.