காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்த தலிபான்கள்!
தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள், இன்று காபூல் விமான நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலிபான் உறுப்பினர்கள் “அல்ஹாவிற்கு நன்றி” என கூறியவாறு காபூல் விமான நிலையத்திற்குள் பிரவேசித்ததாக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேறியதை கொண்டாடும் வகையில், தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை நடத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டிருந்த அமெரிக்க படைகள் முழுமையாக அங்கிருந்து வெளியேறியுள்ளன.
சுமார் 20 வருடங்களின் பின்னர், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
LIVE: A view of Kabul airport as U.S. completes withdrawal from Afghanistan https://t.co/oMO1EX3jYM
— Reuters (@Reuters) August 31, 2021