ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை!
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர் ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் நடந்த நிகழ்ச்சியில் நல்லொழுக்கத்துறை மந்திரி காலித் ஹனாபி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது, மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன் சத்தமாக பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்கள்
அல்லா ஹு அக்பர் கோஷம் எழுப்ப அனுமதி கிடையாது. இஸ்லாமின் நம்பிக்கை வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது.
தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை” என்றார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
விதித்துள்ள புதிய தடை
அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன.
பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதித்துள்ளன.
பெண்களுக்கு பல்வேறு தடைகளை பிறப்பித்து, ஐ.நா.வின் கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |