ஆப்கானில் கொடூரம் - காணாமற் போகும் பெண்கள்
missing
women
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் கைதுகள் மற்றும் கொலைகள் பற்றிய ஆதாரங்கள் பெருகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பல பெண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த பெண்கள் தங்கள் பிடியில் உள்ளதாக வெளிவந்த தகவலை தலிபான்கள் மறுத்ததோடு, முந்தைய ஆட்சியில் பணியாற்றிய அனைவருக்கும் தாம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பழிவாங்கும் முறை குறித்து ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
