வரவு - செலவுத் திட்டத்துக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு
Parliament of Sri Lanka
Ilankai Tamil Arasu Kachchi
Anura Kumara Dissanayaka
S. Sritharan
Budget 2027
By Sindu
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எம்.பி. இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் தொடர்பிலான எந்தவொரு முன்மொழிவும் இல்லாத காரணத்தினால் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (20) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்ப்பு
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சிறிதரன் எம்.பி. வரவு - செலவுத் திட்டத்துக்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி