கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசு கட்சி மறுப்பு -மட்டக்களப்பு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என்பதில் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சி உறுதியாக உள்ளது.
மட்டக்களப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் கூட்டமைப்பை பதிவு செய்வதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பங்காளி கட்சிகளின் கோரிக்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பங்காளி கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என தமிழரசின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்ய மறுத்து தீர்மானம்
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அவர்களது காலத்திலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எனவே தொடர்ந்தும் கூட்டமைப்பை தொடர்ந்தும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
