இலாப நோக்கு அரசியலுக்குள் பலிக்கடாவாகாதீர்கள்: இளைஞர்களுக்கு புலம்பெயர் தொழிலதிபர் சுட்டிக்காட்டு
அரசியல் கட்சியோ, அரசியல் தலைவர்களோ உங்களை இலாப நோக்கு அரசியலுக்காக பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள் என புலம்பெயர் தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் வைத்துகொண்டு எமக்கான விடுதலையோ எமது அடுத்த தலைமுறைக்கான ஒரு எதிர்காலத்தையோ தீர்மானிப்பது சாத்தியமே இல்லை.என்றார்.
யாழ். மாவட்ட இளைஞர்கழக சம்மேளன பொதுச்சபை தெரிவுக்கூட்டம் யாழ்.பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(10) இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம் இனம் பெரிய கனவுகளை சுமந்து இலக்குகளை நோக்கி பயணித்த ஒரு இனம். இந்த 15 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இன்றி எவ்வித அரசியல் நகர்வுகளும் இன்றி ஒரே இடத்தில் இருப்பது போன்று உணர்கின்றேன் என்றார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |