கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளராக வைத்தியர் ஜமுனானந்தா
Jaffna
Colombo Hospital
Jaffna Teaching Hospital
Hospitals in Sri Lanka
By Thulsi
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Jaffna Teaching Hospital) பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளராக கடமையேற்க உள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக பணியாற்றிய வைத்தியர் ஜமுனானந்தா நேற்று இடமாற்றம் பெற்றதையடுத்து, இன்று (10) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்க உள்ளார்.
இதனையொட்டி, நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அவரது பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவமனையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு, அவரது சேவையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்