நீச்சல் பயிற்சியின் போது பலியான 5 வயது சிறுவன் - உதவி அதிபர் உள்ளிட்ட எழுவர் கைது
புதிய இணைப்பு
நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேரை மிரிஹான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணவர் குழு ஒன்று ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
சிறுவனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று (9) இடம்பெற்றதுடன், களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சடலம் தொடர்பாக திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
காவல்துறையினரால் கைது

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்து நேற்று (08) மாலை நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
மேலதிக விசாரணை
இந்த சிறுவன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.

இதன்போது, சிறுவன் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும், மிரிஹான காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |