மகிந்தவின் மத்தள விமான நிலையத்தின் கதி - அரசின் முக்கிய தீர்மானம்
ஹம்பாந்தோட்டையில் (Hambantota) உள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பல புதிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்தவகையில், மத்தள விமான நிலையத்தில் வனவிலங்குத் துறையின் பிரத்தியேக அலுவலகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காட்டு யானைகள் மற்றும் ஏனைய விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அணுகல் சாலைகளைக் கடக்கும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருகின்றன.
உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல்
இதன் காரணமாக உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விமான நிலைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், புதிதாக நிறுவப்படவுள்ள அலுவலகம், வனவிலங்கு நடமாட்டத்தைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல், தாக்குதல்களைத் தடுப்பது
மற்றும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற விடயங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025-01-06 திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கான நேர அட்டவணைக்கமைய பயணங்களில் ஈடுபடும் விமான சேவைகளுக்கு வெளிச்செல்லல் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
