விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்! கிடைத்தது அங்கீகாரம்
2025/26 பெரு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான உரத்திற்கான நிதி மானியத்தை வழங்குவதற்காக 33,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025/26 பெரு போகத்தில் பயிரிடப்படும் என மதிப்பிடப்பட்ட நெல் மற்றும் பிற வயல் பயிர்களின் மொத்த பரப்பளவைக் கருத்தில் கொண்டு, உரத்திற்கான நிதி மானியத்தை வழங்க சுமார் 05 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
அதன்படி, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரத்திற்கான நிதி மானியங்களை செலுத்துவதற்காக 05 பில்லியன் ரூபாவை கூடுதலாக வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் கூட்டாக இந்த முன்மொழிவை சமர்பித்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
