நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை! அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு
Parliament of Sri Lanka
Sri Lankan Peoples
Saidulla Marikkar
NPP Government
By Dilakshan
நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் திட்டம் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, குறித்த திட்டத்தை மாற்றுமாறு அவர் இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலாத் துறையின் நலன்
அது தொடர்பில் மரிக்கார் மேலும் கூறுகையில், “ “நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
சுற்றுலாத் துறையின் நலனுக்காக இந்த முடிவை மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவில் பென்டகனின் மீது விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதை ஏன் தடை செய்ய விரும்புகிறீர்கள்.?” என்றார்.

ஐ.நாவிலிருந்து அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி: இராணுவத்திற்கு எதிராக சர்வதேசத்தில் முறைப்பாடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்