தமிழ்த் தேசிய அடங்காப்பற்றாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் : சத்தியலிங்கம் எம்.பி இரங்கல்
தமிழ்த்தேசிய அரசியலில் கொண்ட கொள்கையில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் தனது இறுதி மூச்சுவரை தடம்மாறாது பயணித்த தமிழ்த்தேசிய பற்றாளன் அமரர் எம்.கே.சிவாஜிலிங்கம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஈழ விடுதலை போராளியாக, நாடாளுமன்ற உறுப்பினராக, மாகாணசபை உறுப்பினராக, நகரசபை தலைவராக பல பதவிகளை வகித்தவர்.
தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம்
அவர் பிறந்த வல்வெட்டித்துறை வீரம்விளைந்த மண்ணின் மைந்தனாய் இறுதிவரை தமிழ்மக்களின் உரிமைக்காக போராடியவர்.

இறுதிக்காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த போதிலும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் நாம் அனைவரும் இருந்தபோதிலும் அவரது மறைவு தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |