மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ் பொதுவேட்பாளர்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கும் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளர் இன்று (19) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் சகல பிரசாரக்கூட்டங்களிலும் மாலை அணிவித்தல், பொன்னாடை போர்த்தல், ஆரத்தி எடுத்தல், கௌரவிப்பு செய்தல் போன்ற விடயங்களை தவிர்த்து பிரசாரப்பணிகளை மட்டும் செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் முற்கூட்டியே தெரியப்படுத்தவும்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்
முதலாவது அறிமுக கூட்டம் என்பதால் நேற்று (18/08/2024) முல்லைத்தீவில் (Mullaitivu) எதிர்பாராத விதமாக மக்கள் மாலை அணிவித்தார்கள், அதை மனப்பூர்வமாக ஏற்றேன்.
இனி எந்த ஒரு பிரசார நடவடிக்கையிலும் மாலை, பொன்னாடை, என்பவற்றை தவிர்த்து பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு சகல ஏற்பாட்டார்களுக்கும் முற்கூட்டியே அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |