தமிழ் வேட்பாளர் என்பது சாத்தியமற்றது! உண்மையை எடுத்து கூறும் சீ.வீ.கே சிவஞானம்

Sri Lankan Tamils Tamils Ranil Wickremesinghe Sri Lanka
By pavan Apr 09, 2024 12:41 PM GMT
Report

எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்! எதிர்ப்பை வெளிப்படுத்தும் டக்ளஸ் தரப்பு

அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்! எதிர்ப்பை வெளிப்படுத்தும் டக்ளஸ் தரப்பு

தமிழ் வேட்பாளர்

இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி இன்னமும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவில்லை. ஆனால், தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் இது எவ்வாறாயினும் நடைமுறைச் சாத்தியமாகாது.

பொது வேட்பாளரைத் தேடிப் பிடிப்பதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித்தான் இருக்கின்றன.

தமிழ் வேட்பாளர் என்பது சாத்தியமற்றது! உண்மையை எடுத்து கூறும் சீ.வீ.கே சிவஞானம் | Tamil General Candidate Sri Lanka

ஆகவே, தனிப்பட்ட வகையில் என்னுடைய கருத்து என்னவெனில் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாகப் பலமாக நாங்கள் இருக்க வேண்டும். அந்தப் பலத்தோடு நாங்கள் பேரம் பேசலாம்.

ஆனால், ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கின்றபோது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் எங்களோடு பேரம் பேசாமலும் போகலாம்.

இவ்வாறான சூழல்களும் இருப்பதாலே என்னுடைய தனிப்பட்ட கருத்து இது ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும்.

பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியானது அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியானது அறிவிப்பு

 நடைமுறைச் சாத்தியமற்றது 

அது பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும். எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே முடங்கி விடும். அல்லது சாத்தியமற்றதாக அமையும்.

தமிழ் வேட்பாளர் என்பது சாத்தியமற்றது! உண்மையை எடுத்து கூறும் சீ.வீ.கே சிவஞானம் | Tamil General Candidate Sri Lanka

பொது வேட்பாளர் தெரிவில் பொது வேட்பாளர் எந்தக் கட்சி என்ற விடயத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, அனைத்து விடயங்களையும் பார்க்கின்றபோது இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஆனாலும், கட்சி இனிக் கலந்து பேசி முடிவுக்கு வரலாம். அதன் பிறகு அதனோடு நாங்கள் உடன்படுவதா? இல்லையா? என்பதையும் தீர்மானிக்கலாம்." - என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025