கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..!

Sri Lankan Tamils J Jayalalithaa Tamil nadu India Sonnalum Kuttram
By Pakirathan Jun 11, 2023 03:53 PM GMT
Report

"இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்ட அறிக்கையானது வலியால் துவண்டு போயுள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதலை தருகின்ற விடயமாக உள்ளது.

இதற்கு முக்கியமான காரணமாக ஜெயலலிதா இருக்கின்றார், குறிப்பாக இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் இந்திய மத்திய அரசிற்கு பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்தார்."

இவ்வாறு, ஈழத்து கலைஞர் தீபச்செல்வன் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் திட்டம் 

கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..! | Tamil Genocide Canada Report Jayalalitha S Action

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"2009 ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நிறைவு பெற்றதன் பின்னர் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது, அதாவது இனிமேல் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நாங்கள் எதையும் செய்ய முடியாது, இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களையும், படுகொலைகளையும் மறந்து அவர்களோடு இணைந்து வாழ்வது தான் உத்தமமானது.அதை மீறி செயற்பட்டால் அது எங்களை அழிக்கும்.

இப்படி ஒரு கருத்தை சொல்லக்கூடிய தரப்பு இலங்கை, இந்திய உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு ஆதரவாக சிலர் மாறியிருந்தார்கள்.

அந்த நேரத்தில் தமிழக தலைவர்கள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களை வழங்கி இருந்தார்கள், குறிப்பாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, சர்வதேச அரங்கில் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், இந்திய அரசு முதலில் இனப்படுகொலை தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் போன்ற அழுத்தங்களை வழங்கி இருந்தார்கள்.

அதேசமயத்தில் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்கள் நகைச்சுவையாக பார்த்தார்கள், இவர்களால் என்ன செய்ய முடியும் எனக் கேட்டார்கள்.

ஒட்டுமொத்த குரல்

கனடாவின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு ஜெயலலிதாவும் காரணமா..! | Tamil Genocide Canada Report Jayalalitha S Action

இதை எல்லாம் தாண்டி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக ஜெயலலிதா இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார், இலங்கையுடன் இந்திய பொருளாதார உறவு கொள்ளக்கூடாது, இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் இந்திய சர்வதேசத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்திருந்தார்.


இப்படியாக ஜெயலலிதா முன்வைத்த பல கோரிக்கைகள் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த குரலாக அறிவிக்கப்பட்டது.

இப்படியான நகர்வுகளுக்கு பின்னரே வட மாகாணத்தில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என கனடா ஏற்றுக்கொண்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் முதன்மை காரணமாக அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் தான்.

புலம்பெயர் தேசம் முழுவதும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பில் பிரேரணைகள் முன்வைக்கப்படுவதற்கும், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதற்கும் பிரதான காரணமாக ஜெயலலிதா இருக்கின்றார்." என்றார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026