ஆயுள் தண்டனையில் இருந்து தப்பி ஓடிய தமிழர்! கொழும்பில் சுற்றிவளைத்த காவல்துறை
போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றிருந்த கனபதி கணேஷ் எனப்படும் தொட்டலங்க கண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண குற்றப்பிரிவின் ரகசிய தகவலின் பேரில் கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு, எலகந்த பகுதியில் 39 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கனபதி கணேஷ் எனப்படும் தொட்டலங்க கண்ணா மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்தார்.
ஆயுள் தண்டனை உத்தரவு
முன்னதாக இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேபரான தொட்டலங்க கண்ணாவுக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுகளை மீறி சென்றுள்ளார்.
அதன்படி, சந்கதேபர் இன்றி நடத்தப்பட்ட நீண்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்றம் மேற்கண்ட சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த நிலையில், மேற்கு மாகாண புலனாய்வுப் பிரிவின் கம்பஹா பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று(15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொட்டாஞ்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரால் தொட்டலங்க கண்ணா இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
