சுக்குவின் மிகச் சிறந்த மருத்துவ பலன்கள் - முக்கிய நோய்களுக்கு உடனடி தீர்வு!
Tamil
By pavan
தமிழ் மருத்துவத்தில் மிக முக்கிய மருந்துப்பொருட்களில் ஒன்று சுக்கு. இதற்கு மிகப்பெரும் மதிப்பே உள்ளது.
திரிகடுகம் என்ற நூலில் மிக சிறந்த மருந்து பொருட்களாக "சுக்கு மிளகு திப்பிலி" குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் உள்ள முதல் பொருளான சுக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? சுக்கு மிஞ்சிய மருந்தில்லை என பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.
அந்த வகையில், சுக்கு சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும், சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுக்கே சிறந்த தீர்வாகிறது.
வாந்தியை நிறுத்துவதுடன், வாயுவை கட்டுப்படுத்தகூடியது, நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும்.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
- சுக்கை மென்று அதன் சாற்றை மட்டும் விழுங்கினால் தொண்டைக்கட்டு சரியாகும்.
- சுக்கு மற்றும் அதிமதுரத்தை பொடி செய்து 1 கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் சரியாகும்.
- சுக்கை பற்றாக தலையில் போட்டால் தலைவலி பறந்தோடும், மூட்டின் மீது தடவினால் மூட்டு வலி சரியாகும்.
- 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து வைக்க வேண்டும், நீர் ஆறிய பின்னர் தேன் அல்லது சர்க்கரை கலந்து பருகி வர வயிறு பிரச்சனைகள் சரியாகும்.
- பூண்டுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று நோய் குணமாகும், தேனும் எலுமிச்சை சாறு குழைத்து சாப்பிட்டால் உடல் பலம் தரும்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி