தமிழக அரசியல் களம் அதிர்வு : 109 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை
புதிய இணைப்பு
வெளியாகி வரும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் 12.00 நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன் அதிமுக கூட்டணி 65 இடங்களிலும் திமுக கூட்டணி 60 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இது தற்போதைய சுற்று வாக்கு எண்ணிக்கையில் 13 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 50 இலட்சம் வாக்குகளை த.வெ.க பெற்றுள்ளது.
நான்காம் இணைப்பு
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காலை 11.50 நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன் அதிமுக கூட்டணி 74 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக கூட்டணி 52 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் 10வது சுற்றிலும் தவெக முன்னிலை வகிப்பதுடன், மதுரை மேற்கு, திருவிகநகர், கே.வி.குப்பம், ராதாபுரம், காரைக்குடி, உத்திரமேரூர், செய்யூர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிக்கின்றது.
மூன்றாம் இணைப்பு
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.50 மணி நிலவரப்படி தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அத்துடன் அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
இந்த நிலையில் நாமக்கலில் 3 தொகுதிகளில் தவெக. முன்னிலை வகிப்பதுடன், கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை 10.40 நிலவரப்படி வரை த,வெ,க 33.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.30 நிலவரப்படி 234 தொகுதிகளில் 102 இடங்களில் தவெக முன்னிலை வகிப்பதுடன், 81 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிப்பதுடன் 51 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.
இந்தநிலையில் எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிப்பதுடன், துறைமுகம், விருத்தாசலம், காங்கேயம், திருப்பூரில் 5 தொகுதிகள், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள், திருப்பரங்குன்றம், அம்பத்தூர், மாதவரம், ஆலந்தூர், வில்லிவாக்கம், திண்டுக்கல், திருவெறும்பூர், பொள்ளாச்சி, பல்லடம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேளச்சேரி, திருப்போரூர், மதுரை மேற்கு, ராதாபுரம், மதுரை மத்திய தொகுதி, ராயபுரம் ஆகிய தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்துள்ளது.
இந்தநிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலை வகிப்பதுடன், மதுரை மத்திய தொகுதியில் த.வெ.க வேட்பாளர் முஸ்தபா முன்னிலை வகிக்கின்றார்.
இதேவேளை தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுகவைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் சற்று முன்னர் வரை வெளியான முடிவுகளின் படி திமுகவின் முக்கிய அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பலரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் தவெகவின் புதுமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
அந்தவகையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலையில் உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார்.
திமுக அமைச்சர்களான கீதா ஜீவன், நாசர், முத்துசாமி, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும் பின்னடைந்துள்ளனர்.
பின்னடைவை சந்தித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் சுந்தர்.சி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றார்.
இதேவேளை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |