தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊடரங்கு
தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கூட்டம் அலை மோதுகின்றமை தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மரக்கறி வியாபார நிலையங்களிலும் பல சரக்கு கடைகளிலும் மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிவதாக தமிழகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தில் இரண்டாம் அலைத் தொற்று தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், இன்று அனைத்து வியாபார நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு குவிந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.