கையளிக்கப்பட்டது தமிழ்த்தேசிய கட்சிகளின் கூட்டு ஆவணம்- சிரத்தை கொள்ளுமா இந்தியா?
By Kalaimathy
கொழும்பில், தமிழ் பேசும் கட்சிகளுக்கும் இந்திய தூதுவருக்குமிடையில் சற்று முன்னர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் வைத்து கோபால் பாக்லேவிடம் குறித்த ஆவணம் இரா.சம்பந்தனால் கையளிக்கப்பட்டது.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து இந்த ஆவணத்தை தயாரித்தன.
இந்த சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்