பாகிஸ்தானில் இந்து பெண் மருத்துவர் சுட்டுக்கொலை - காரணத்தை தேடும் காவல்துறையினர்
பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் மருத்துவர் பீர்பால் ஜெனனி என்பவர் மீது நடதப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இவர் மகிழுந்தில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன் கிளினிக்கில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவரும் சென்றார்.
கராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது மகிழுந்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் நிலை தடுமாறிய மகிழுந்து அருகில் இருந்த சுவர் மீது மோதி நின்றது.
தீவிர சிகிச்சை

இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த மருத்துவர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் காரில் பயணம் செய்த பெண் மருத்துவர் உடலிலும் குண்டு பாய்ந்தது.
இது பற்றி அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காயம் அடைந்த பெண் மருத்துவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் டாக்டர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
காரணம் என்ன

என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்து இருக்கலாமா?என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தப்பிஓடிய மர்ம மனிதர்களை பிடிக்கும் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் இந்த மாதத்தில் 2 இந்து மருத்துவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.