தமிழ்மக்களின் குரலாக பிரதிநிதிகள்! இனத்தின் இருப்பிற்காக வாக்களிப்போம்: வன்னிமாவட்ட வேட்பாளர்

Sri Lankan Tamils Tamils Vavuniya
By Shadhu Shanker Oct 16, 2024 07:52 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழ்மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் பிரதிநிதிகளை நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டிய அவசியம் தொடர்பில் தாயகமக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்சொந்தங்களும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் என முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடகக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடகக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… “தெற்கில் இன்று அரசியல் மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது.அந்த மக்கள் மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அநுரவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். வடகிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் வரவேண்டும் என்று பலரும் சிந்திக்கின்றார்கள்.

பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறிய தமிழரசுக் கட்சி

பாதி சிங்களமும் பாதி தமிழுமாக மாறிய தமிழரசுக் கட்சி

தெற்கின் மாற்றம்

அந்த மாற்றத்திற்குள் பலவிடயங்கள் இருக்கிறது. நாடு பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து ஊழல்வாதிகளால் சூறையாடப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் ஒரு புதியயுகத்தினை ஏற்படுத்துவதற்காக சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அதனை நாம் வரவேற்கின்றோம்.

தமிழ்மக்களின் குரலாக பிரதிநிதிகள்! இனத்தின் இருப்பிற்காக வாக்களிப்போம்: வன்னிமாவட்ட வேட்பாளர் | Tamil Parties Face Election Challenges

அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். இதேவேளை தெற்கு சிங்களமக்கள் விரும்புகின்ற மாற்றமும் வடகிழக்கு தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்களும் ஒன்றல்ல. இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது

இலஞ்சத்தையும் ஊழலையும் அகற்றினால் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழமுடியுமா. அல்லது அதனை மாத்திரம் நாம் மாற்றம் என்று கூறமுடியுமா. இன்று வடகிழக்கு தமிழர்பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்பரம்பல் செயற்பாடுகள் தமிழ்ப்நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.

மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு

மதுபானசாலை விவகாரத்தில் அதிக அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் : கடுமையாக சாடும் அமைப்பு

தமிழ்பிரதிநிதித்துவம்

சமகாலத்தில் திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஒரு தமிழ்பிரதிநிதித்துவத்தை பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திலும் இந்த நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்மக்களின் குரலாக பிரதிநிதிகள்! இனத்தின் இருப்பிற்காக வாக்களிப்போம்: வன்னிமாவட்ட வேட்பாளர் | Tamil Parties Face Election Challenges

எனவே தமிழ்மக்களின் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டியபொறுப்பு எம் அனைவர் முன்னும் இருக்கிறது. இது தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். ஏற்கனவே அதிகளவான தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து சென்றுள்ளமையால் தமிழ்பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்லும் நிலமையினை காண்கின்றோம்.

இந்நிலையில் மாற்றத்தினை விரும்பி நீங்கள் அளிக்கின்ற வாக்குகளால் எமது பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து சிங்கள பிரதிநிதிகளே நாடாளுமன்றுக்கு செல்வர். அவர்களுக்கு தமிழர்களின் பிரதான பிரச்சனைகளே தெரியாது. அவர்கள் எமக்காக பேசுவார்கள் என நம்பமுடியுமா. நாம் ஈழவிடுதலை போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகளை இழந்துவிட்டோம்.

355 கோடி வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸ் - அரசு நடவடிக்கை

355 கோடி வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸ் - அரசு நடவடிக்கை

இனப்பிரச்சனை

எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம். பலர் அங்கவீனமுற்று அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பலர்காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.இனப்பிரச்சனைக்கு தீர்வில்லை. இவை தொடர்பாக சிங்கள பிரதிநிதிகளால் நாடாளுமன்றில் குரல்கொடுக்க முடியுமா. இல்லை. அல்லது சர்வதேசத்திற்குத்தான் தெரியப்படுத்த முடியுமா.

தமிழ்மக்களின் குரலாக பிரதிநிதிகள்! இனத்தின் இருப்பிற்காக வாக்களிப்போம்: வன்னிமாவட்ட வேட்பாளர் | Tamil Parties Face Election Challenges

இந்த நிலைமையில் நாம் தேசிய கட்சிகளுக்கு அளிக்கின்ற வாக்கானது அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதுடன் 50 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் விடுதலைவேட்கையினை நீர்த்துப்போகச்செய்யும் நிலையினை ஏற்ப்படுத்தும்.

எனவே தெற்கில் ஏற்ப்பட்ட மாற்றத்திற்கான அலையில் தமிழ்மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப்பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.

தமிழ்மக்களின் குரல்

தமிழ்மக்களின் குரலாக ஓங்கிஒலிக்கும் பிரதிநிதிகளை நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டிய அவசியம் தொடர்பில் தாயகமக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்சொந்தங்களும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.

தமிழ்மக்களின் குரலாக பிரதிநிதிகள்! இனத்தின் இருப்பிற்காக வாக்களிப்போம்: வன்னிமாவட்ட வேட்பாளர் | Tamil Parties Face Election Challenges

தொடர்ச்சியான தேர்தல்களில் வடகிழக்கு தமிழ்மக்கள் சலுகைஅரசியலை புறம்தள்ளி உரிமைஅரசியலை பேசுகின்ற தமிழ்த்தேசிய கட்சிகளுக்கே தமது ஏகோபித்த ஆதரவினை வழங்கிவந்திருக்கின்றனர்.

எனவே இந்த தேர்தலிலும் தடம்மாறாது தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதற்கு ஒற்றுமையோடு அணிதிரளவேண்டும்என்று தமிழ்மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016