தமது குடுமிச்சண்டைக்கு இந்திய துணை ஜனாதிபதியிடம் தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர் : கிண்டலடிக்கும் டக்ளஸ்

13th amendment Douglas Devananda India ITAK
By Theepan Apr 22, 2026 01:24 PM GMT
Report

  இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணனுடனான சந்திப்பை தமிழ் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களது சந்திப்பு தமக்கிடையே இருக்கும் குடுமிச் சண்டைக்கு தீர்வு கேட்டதாகவே அமைந்திருந்தது என்றும் சாடியுள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகையும் தமிழ் அரசியல் தரப்பினரது சந்திப்பும் தொடர்பில் கருத்துக் கூறுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

குடுமிச் சண்டையை எடுத்துக் கூறி தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர்

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் உதவி ஜனாதிபதி இலங்கை வந்திருந்த போது அவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கிடையே இருக்கும் குடுமிச் சண்டையை எடுத்துக் கூறி தீர்வு கேட்டதாக இருந்ததே தவிர தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அபிலாசைகளையோ கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கான ஒன்றாக அமையாதது எனக்கும் எமது மக்களுக்கும் வேதனையையும் ஏமாற்றத்தையுமளித்துள்ளது.

தமது குடுமிச்சண்டைக்கு இந்திய துணை ஜனாதிபதியிடம் தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர் : கிண்டலடிக்கும் டக்ளஸ் | Tamil Parties Meet Indian Vice President

இன்றைய காலச்சூழலில் இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கை வருகை தந்ததானது வரவேற்கத்தக்க ஒரு செய்தி.

அதேநேரம் அவரது வருகையையும் சந்திப்பையும் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய கவலையாக இருக்கின்றது.

ஏனென்றால் கடந்தகாலத்தில் இவ்வாறு எனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களையும், நாமாகவே சந்தர்ப்பங்களை உருவாக்கியும் எமது மக்கள் தேவைகள் குறித்து நாம் சரியாக கையாண்டிருக்கின்றோம்.

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ் கட்சிகள்

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ் கட்சிகள்

இந்திய பயணத்தால் கிடைத்த நன்மைகள்

குறிப்பாக நான் 2010 இல் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்டக் குழுவுடன் இந்தியா சென்றிருந்தபோது 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் 500 உழவு இயந்திரம், யாழ் கலாசார மத்திய நிலையம் உள்ளிட்ட அவசிய தேவைகளை பெற்றிருந்ததுடன் 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வுக்கான ஆரம்பம், ஆனால் அது ஒரு நிரந்தர தீர்வல்ல என்றும் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருந்தேன்.

தமது குடுமிச்சண்டைக்கு இந்திய துணை ஜனாதிபதியிடம் தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர் : கிண்டலடிக்கும் டக்ளஸ் | Tamil Parties Meet Indian Vice President

அவ்வாறாக நாம் முன்னெடுத்த சந்திப்புக்கள் எமது மக்களுக்கு பல வகைகளிலும் நன்மையாகவே அமைந்திருக்கின்றது.

ஆனால் தற்போது இவர்களது இந்த சந்திப்பு என்பது தமக்குள் இருக்கும் குடுமிப்பிடி சண்டையை அவரிடம் சென்று சொல்லி தீர்வுக்காக கலந்துரையாடியது போலவும் அதேநேரத்தில் எமது மக்களுக்கிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அழுத்தமாக கோரிக்கைகளையோ தேவைகளையோ கோரவில்லை என்பதும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பு...! சிவிகே வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பு...! சிவிகே வெளியிட்ட முக்கிய தகவல்

13 ஆவது திருத்தச் சட்டம்

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தளவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகவே ஒரு தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பார்கள். அதற்கும் மேல் அவர்கள் போகமாட்டார்கள்.

தமது குடுமிச்சண்டைக்கு இந்திய துணை ஜனாதிபதியிடம் தீர்வு கேட்ட தமிழ் தரப்பினர் : கிண்டலடிக்கும் டக்ளஸ் | Tamil Parties Meet Indian Vice President

அதனடிப்படையில் அதையாவது இவர்கள் பெற்றுத்தருமாறு எடுத்துரைத்து கேட்டிருக்கலாம்.

ஆனால் இவர்கள் வழமைபோன்று தமது சுயலாப அரசியலில் இருந்துகொண்டுதான் இந்தச் சந்திப்பையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

இவர்களது இந்த செயற்பாடானது மக்களை கடுமையாக வேதனையடைய வைத்துள்ளதுடன் குறிப்பாக இவர்களா எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் நோக்கில் இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்திருக்கின்றார்கள் என்றும் சலித்துக்கொள்ள வைத்துள்ளது.

அந்தவகையில் மக்கள் தேவைகள் முன்னிறுத்தப்படாது தமது குடுமிச் சண்டைக்கு தீர்வு கேட்டது போன்ற இந்த சந்திப்பு எனக்கும் வேதனையளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026