இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பு...! சிவிகே வெளியிட்ட முக்கிய தகவல்
வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டதாகவும் அதனை ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வருமாறும் இந்தியத் துணை ஜனாதிபதி வலியுறுத்தியதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (21-04-2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் “கட்சிகள் அதிகரித்து விட்டது, ஓரளவுக்கு இதனை ஒழுங்குக்குக் கொண்டு வாருங்கள் என இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் எனதும் சிறீதரனதும் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.
அரசியல் ஞானம்
ஆழமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், வீட்டுக்கு வீடு கட்சிகள் உருவாகி விட்டது, மாவட்டத்துக்கு மாவட்டம் மாகாணத்துக்கு மாகாணம் என ஒவ்வொரு கட்சிகள் உருவாகிவிட்டது.

அவர்களுக்கு எத்தனை கட்சி இருக்கிறது என உண்மையில் தெரியாது, இது ஆரோக்கியமானது அல்ல என்பதை அனுபவம் உள்ள அரசியல் ஞானம் உள்ள ஒரு பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சரவை உறுப்பினராக இருந்த ஒருவரின் வாயிலிருந்து வருகிறது என்று சொன்னால் அதில் நாங்கள் அவதானமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அவர் கூறிய கருத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் சந்திப்பு மிக ஆரோக்கியமானது எமது கருத்துக்களைச் சொல்லக்கூடியதாக இருந்தது.
அரசியலமைப்பு
நமது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளக்கூடிய தமிழர் என்கின்ற வகையில் அவரது அனுபவம் நன்றாக இருந்தது, அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்லாது மாகாண சபை தேர்தல் சம்பந்தமாகவும் நாம் தெரிவித்தோம்.

அந்த அடிப்படையில் தொடர்ந்து பதவியில் இருந்து கொண்டு இருக்கிறேன் ஆகவே அந்த அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்.
அதை அவர் ஜனாதிபதியோடு பேசியதாகவும் சொல்லியிருக்கிறார், தெளிவாகச் சமஷ்டியை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்