தமிழ் தலைமைகள் தொடர்பில் அமெரிக்க தூதுவரின் நிலைப்பாடு: சிறீதரன் சுட்டிக்காட்டு
தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் (Julie Chung) வலியுறுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவருடனான நேற்றைய (15) சந்திப்பு தொடர்பில் கிளிநொச்சியில் (Kilinochchi) அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இருந்த தமிழ்கட்சிகள் பிளவு பட்டு இருக்கின்றன.
தமிழ் கட்சிகள்
அதே போல் தமிழரசுக் கட்சிக்குள்ளும் நீதிமன்ற வழக்கு காணப்படுகிறது.இவ்வாறு தமிழ் கட்சிகள் பிளவுபடாது ஒன்றிணையும் போதே பலமாக முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காவல்துறையினர் பொது மக்களை கைது செய்யும் விடயங்கள், தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |