அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
"சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது ஒருமித்த குரலில் பேச வேண்டும்.
இரா.சம்பந்தன், சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடி அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை எடுப்போம்."
இவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பேசுவதே முக்கியமான தேவையாக உள்ளது.
தனித்தனியே பேசும்போது ஒருமித்த கோரிக்கைகள் பலமிழந்து போகும்.
கடந்த காலங்களில் நாங்கள் முன்வைத்த சகலவிதமான கோரிக்கைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி நிராகரித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாது, யாப்பை உருவாக்காது இருந்தது.
இன்று நாம் அனைத்து பொறிமுறைகளையும் நிறைவேற்றியுள்ளோம், யாப்புக் கொள்கைகளை ஏற்று நடக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எங்களோடு இணைய முடியும்.
YOU MAY LIKE THIS
