இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள தமிழர் தரப்பு
colombo
jaishankar
indian-external-affairs-minister
tamil part
By Sumithiran
இலங்கைக்கு நாளையதினம் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை தமிழர் தரப்பு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை (28) பிற்பகல் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் நாளைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
நாளை இலங்கை வரவுள்ள அவர், நாளைமறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி