தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்! தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
றீ(ச்)சா ஒருங்கிணைந்த பண்ணையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மரநடுகை வார நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
கிளிநொச்சி இயக்கச்சியிலுள்ள றீ(ச்)சா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மரநடுகை வாரம்
ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம் என்னும் தொனிப்பொருளில் இந்த மரநடுகை வார செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய கிளிநொச்சி மருதுநகர், பன்னங்கண்டி, அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கறுவா கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று மருதங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கறுவா மர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கறுவா மரக் கன்றுகளை வழங்கும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |