தமிழ் மக்களுக்கு நினைவுகூருவதற்கு கூட உரிமை இல்லை: அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு
யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் உண்மைக்கான, நீதிக்கான தேடுதல் தொடர்கின்றது என மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (18) முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”கடந்த வாரம் நினேவேந்தலுக்கு கூட இங்கு தடை இருந்தது. காவல்துறையினர் நீதிமன்றங்களுக்குச் சென்று தடையுத்தரவுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
ஆகையால் நினைவுகூருவதற்கு கூட தமிழ் மக்களுக்கு இங்கே உரிமை இல்லை. அந்த உரிமை மதிக்கப்படவில்லை.
ஆனால் நாங்கள் நிலைமாறு கால நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நீதி வேண்டும், உண்மை வேண்டும் நினைவு கூரலுக்கான உரிமை வேண்டும்.
நினைவுகூரலினால் தான் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் தமக்கு நடந்த உரிமை மீறல்களைப் பற்றி வெளியில் கூறுகின்றார்கள் என்ற காரணத்தினால் தான் நினைவு கூரலுக்கு அவர்கள் தடை விதிக்கின்றனர்.
அத்துடன் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நினைவு கூரும் போது அது ஒரு அரசியல் அழுத்தத்தையும் கொடுக்கின்றது.” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |