வட பகுதி - தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை உருவாக்க சதி திட்டம்
tamil people
conflict
plan
M. K. Shivajilingam
create
By Vanan
வட பகுதி தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் திட்டமிட்ட சதி நடவடிக்கை அரங்கேற்றப்படுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது, சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களின் போராட்டம் உறுதியாக முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டதன் பின்னணி குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்திய பக்தர்களின் பங்குபற்றுதல் இன்றி, கச்சதீவு திருவிழா நடைபெறுமாயின், அது மோசமான நிலைமைளுக்கே வித்திடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
