தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் (CV Vigneswaran) இல்லத்தில் நேற்று (19.10.2024) மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து, கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணியானது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனித்து போட்டியிடுகிறது.
இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர் ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ் ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்களை இன்று (18) சந்தித்தனர்.
பிரசார பணிகள்
இதன் போது தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடிதுடன் மதத் தலைவர்களிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டனர்
இதனைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரசார பணிகளை முழு வீச்சில் முன்னெடுக்க உள்ளதாக மணிவண்ணண் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் மான் சின்னத்தில் களமிறங்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வரதராஜன் பார்த்தீபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தம் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |