தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்!
தமிழ்த் தேசிய நீக்கத்தைச் செய்கின்ற தரப்பினரை தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து நீக்குவதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது சேர். ஜோன். கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
இச்சட்டமூலம் இலங்கையை சட்ட ரீதியாக இராணுவ மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கே வழிவகுக்கும்.
இதற்கு எதிராக குரல் கொடுத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது ஒரு ஜனநாயக படுகொலையாகும்.
கோட்டாபய அரசினுடைய எதேச்சதிகார - சர்வதிகார ஆட்சி எல்லை மாறிக்கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இதனால், ஜனநாயகப் படுகொலை தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் என்றார்.