இதனை செய்தால் மாத்திரமே நிரந்தரமான அரசியல் தீர்வு : சாணக்கியன் சுட்டிக்காட்டு
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஓரணியாக நின்றால் மாத்திரமே எமக்கு நிரந்தரமான ஒரு அரசியல்தீர்வு இந்த நாட்டிலே வரும் என்ற நம்பிக்கையில் வாழமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் “களம்” நிகழ்ச்சியில் இணைந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் “அண்மையில் மூல்லைத்தீவில் மீனவ சங்கத்தலைர் மீது ரவுடி அமைச்சரின் கும்பல் பலமான தாக்குதலை செய்திருக்கின்றது.
அவரது அடாவடித்தனத்தை காட்டியும் வன்னி மண்ணில் அடிவாங்காமல் போயுள்ளார் காரணம் அமைச்சர் என்ற பதவிக்கு அந்த மக்கள் மரியாதை கொடுத்துள்ளனர் என தெரிவித்தார்.
ஊழல்வாதிகள் இல்லாத அரசு என்றார்கள் வன்னிமாவட்டத்தில் தேசியமக்கள் சக்தியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.
அவர்கள் அரச ஊழியர்களாக இருந்த போது பெண்களுக்கான வாழ்வாதாரத்திட்டத்திற்காக வந்த நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
