தமிழர் பகுதியில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு - நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் பலி - மேலதிக தகவல் வெளியானது
இரண்டாம் இணைப்பு
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு காவல்துறை அதிகாரியே தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அம்பாறை திருக்கோவில் காவல் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர். இதன்போது நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் நவீனன் என்ற இளம் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் புகைப்படமும் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை, காவல் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடத்திய காவல்துறை உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி
அம்பாறையில் துப்பாக்கிசூடு - மூன்று காவல்துறையினர் ஸ்தலத்தில் பலி -பலர் காயம்