கிழக்கு ஆளுநரின் கைகளில் மட்டு. தமிழர்களின் இரத்தக்கறையா..!
மட்டு நகரில் உள்ள பிரதேச சபையின் நிகழ்விற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட மேலும் இருவர் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆளுனருடன் சேர்த்து முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள மற்றைய இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தையே கூறு போட்டு விற்பனை செய்த பெருமைக்குரியவர்கள் என்று மட்டக்களப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகின்ற பெருந்தகைகள்.
சிறிலங்கா அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள், செல்ல நாய்குட்டிகள், அள்ளக்கைகள் என்று சொல்லப்படும் இந்த இரு ஆட்டநாயகர்களையும் மக்கள் சார்ந்த அந்த நிகழ்வுக்கு முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
பிரதேசவாத முலாம்

இருவருமே தமிழ் தேசிய அரசியல் பேசி வாழ்க்கை நடாத்தி வந்தவர்கள்.
பின்னர் பணத்திற்கும், சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு அரசாங்கத்தின் கால்களை நக்கி அமைச்சர்களானவர்கள்.
இரண்டு பேர்கள் மீதும் கொலைப் பழிகள் உள்ளன. தமது இரத்தக்கறை படிந்த கரங்களை பிரதேசவாத முலாம் பூசி மறைத்துக்கொண்டு மக்களுக்கு கைலாகு கொடுத்து வருபவர்கள்.
அதை விட இருவருமே மட்டக்களப்பில் உள்ள மணல் உட்பட அங்கிருந்த முழு கனிய வளத்தையும் சுரண்டி விற்று சொத்து சேர்த்த பெருமைக்கும் உரியவர் எனவும் மட்டு மக்கள் புகழ்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட காணிகளை கள்ள உறுதி எழுதி பதுக்கிய வீரதீரர்கள். இப்படி குறிப்பாக மட்டக்களப்பு மண்ணுக்கும், மட்டக்களப்பு மக்களுக்கும் பல சேவைகளை ஆற்றி மக்களால் சமூக ஊடகங்களில் வாயாரப் புகழப்படுகின்றவர்கள்.
இப்படியாக பல அற்புதங்களை மட்டக்களப்பு மக்களுக்காக செய்து கொண்டிருக்கின்ற இந்த சிங்களத் தமிழர்களை அல்லது தமிழ் முலாம் பூசப்பட்ட சிங்களவர்களை பிரதேச சபையின் முக்கிய நிகழ்விற்கு ஆளுனருடன் முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டமைக்கு மக்கள் எரிச்சல் அடைகின்றனர்.
வேண்டுகோள்

புதிய ஆளுநருக்கு இவர்களது வீரதீர செயல்கள் பற்றி தெரியுமா என்பது தெரியவில்லை. ஆளுனரே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.
இந்த பிரதிநிதிகளுடன் கைகுலுக்கிய பின் குலுக்கிய உங்கள் கைகளை ஒரு தடவை உற்றுப்பாருங்கள்.
மட்டக்களப்பு தமிழர்களின் இரத்தக்கறைகள் உங்கள் கைகளிலும் படிந்திருக்கலாம்..??!!