பிஃபா உலகக்கிண்ணத்தில் இணைந்துள்ள இலங்கை பூர்வீக தமிழ் வீரர்
பிஃபா உலகக்கோப்பை (FIFA world cup) 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர் அறிமுகமாகியுள்ளார்.
இவர் கடந்த ஒக்டோபர் 10 திகதி நடைபெற்ற போட்டியிலேயே அவுஸ்திரேலிய (Australia) தேசிய கால்பந்து அணியில் அறிமுகமானார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் அவுஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
பிஃபா உலகக்கோப்பை
பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலியா அணி தொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போபாவிக் சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை சேர்த்தார்.
அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83வது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்துள்ளார்.
அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர் அணிந்திருந்த 7 என்ற எண் கொண்ட ஜெர்சியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Amazing to see another Tamil professional athlete - this time from Australia.
— Dr. Thusiyan Nandakumar (@Thusi_Kumar) October 12, 2024
Nishan Velupillay scored on his international debut for the Australian national team as they took on PR China last week.
More Tamil excellence ❤️💛💫
🎥 @Socceroos pic.twitter.com/rSQvIFtKEj
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |