தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P.Ariyanethran) மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க போகும் தமிழ் பொது வேட்பாளர் குறித்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டது.
சுயேட்சை வேட்பாளர்
குறித்த அறிவிப்பை தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான என்.ஸ்ரீகாந்தா நேற்றைய தினம் (08) வெளியிட்டார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் பா.அரியநேத்திரன் சுயேட்சை வேட்பாளராகவே காணப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |