தமிழர் பிரச்சினைகளை பாராமுகமாக செயற்படும் சிங்கள தலைமைகள்
கடந்த 80 வருடங்களாக இந்நாட்டில் புறையோடிப்போய் இருக்கின்ற தமிழ் சிங்கள் முரண்பாடு இனமுரண்பாடு என்பவற்றை ஒரு நேர்மையான முறையில் தீர்த்து வைப்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தின நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் இந்நாட்டில் உள்ள தலைவர்கள் அவற்றை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டமானது, இந்த நாட்டில் காணப்படுகின்ற அடக்குமுறைகளில் ஒன்றாக மாறிவிடுமென்ற அச்சம் மக்களிடம் தோன்றியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் இவ்வாறானதொரு சட்டம் கொண்டுவருவதற்கான தேவை என்ன என்பது பற்றியும் சிந்திக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.