கொழும்பில் வீட்டிலிருந்து தமிழ் மாணவன் சடலமாக மீட்பு!
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Colombo
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    கொழும்பு(colombo) மாவட்டம், கெஸ்பவை பிரதேசத்தில் தமிழ் மாணவன் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவனே தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு நேற்று(22) செவ்வாய்க்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யோகேந்திரன் முகுந்தன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குடும்பத்தினருடன் முரண்பாடு
குடும்பத்தினருடனான முரண்பாடு காரணமாக மேற்படி மாணவன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
    
    ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்
 
        
        செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
3 நாட்கள் முன்
            5ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        