பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி
பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற பெருந்தோட்ட நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதியான மக்கள்
முன்னர், அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியுடைய பெருந்தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையாளர் விகிதம் 83.75 சதவீதமாக உள்ள அதே நேரத்தில் தோட்டங்களில் இது 5.6 சதவீதமாக மட்டுமே உள்ளது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4350 வீடுகள் கட்டப்படும் என்றும் 2026 ஆம் ஆண்டில் மேலும் 4350 வீடுகள் கட்டப்பட்டு அந்த வீடுகளும் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |