அகில இந்திய ரீதியில் முதிலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழ் மாணவன் - குவியும் பாராட்டுகள்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு அவர் சாதனை படைத்தமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வு
மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் தேர்வான நீட் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ம் திகதி நாடு முழுவதும் நடைபெற்றது.
வெளியாகிய முடிவுகள்
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். அதேபோல, முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மாணவர்கள் உள்ளனர்.
