வட்டுக்கோட்டை காவல்துறையின் மிருகத்தனமான செயல் : அங்கஜன் கடும் கண்டனம்

Sri Lanka Police Jaffna SLFP Angajan Ramanathan
By Sumithiran Nov 20, 2023 07:41 PM GMT
Report

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்-நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள்

சித்தங்கேணியைச் சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறான காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் யாழ் மாவட்டத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை அல்ல. ஆனால் இதுவே இறுதிச் சம்பவமாக இருக்க வேண்டும்.

வட்டுக்கோட்டை காவல்துறையின் மிருகத்தனமான செயல் : அங்கஜன் கடும் கண்டனம் | Tamil Youth Beaten To Death By Vattukkottai Police

சந்தேக நபர்களை தாக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. ஆனால் இங்கு காவல்துறையினர் சந்தேக நபர்களை வலுக்கட்டாயமாக குற்றவாளிகளாக்கி விடுகின்றார்கள். சந்தேக நபர்களை மனிதராக மதிப்பதுமில்லை. மனித உரிமைகளை மதிக்கத் தெரியாத காவல்துறையினர் எந்தத் தருணத்திலும் காவல்துறையாக இருக்கத் தகுதியற்றவர்கள்.

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றம்!

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றம்!

வட்டுக்கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி  பொறுப்பு

வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்த இளைஞனை காவல்துறை காவலரணில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவில்லை, இளைஞனின் குடும்பத்தாரிடம் இளைஞனை வெளிப்படுத்தவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக 24மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் முற்படுத்த வேண்டிய சந்தேக நபரை நான்கு தினங்கள் பிரத்தியேக மறைவிடம் ஒன்றில் வைத்து உணவு கொடுக்காது மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். இளைஞனது மரணத்திற்கு வட்டுக்கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றும் சகல காவல்துறையினரும் பொறுப்புக் கூற வேண்டும்.

வட்டுக்கோட்டை காவல்துறையின் மிருகத்தனமான செயல் : அங்கஜன் கடும் கண்டனம் | Tamil Youth Beaten To Death By Vattukkottai Police

உடனடியாக வட்டுக்கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இளைஞனது மரணத்துடன் தொடர்புபட்ட காவல்துறையினர் அனைவரது பதவிகளும் பறிக்கப்பட்டு - கைது செய்யப்பட்டு பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற்று தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அடித்து கொன்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர்..! இறக்கும் முன் இளைஞனின் பகீர் வாக்குமூலம் (காணொளி)

அடித்து கொன்ற வட்டுக்கோட்டை காவல்துறையினர்..! இறக்கும் முன் இளைஞனின் பகீர் வாக்குமூலம் (காணொளி)

காவல் நிலையங்களில் பிரத்தியேக இடங்கள் 

யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் சந்தேக நபர்களை மறைத்து வைத்து தாக்கி தமது வாக்குமூலங்களை திணிப்பதற்கான பிரத்தியேக இடங்கள் இருப்பதனை அறிய முடிகிறது.

வட்டுக்கோட்டை காவல்துறையின் மிருகத்தனமான செயல் : அங்கஜன் கடும் கண்டனம் | Tamil Youth Beaten To Death By Vattukkottai Police

மனித உரிமைகளைப் பேணும் நிறுவனங்கள் பலவும் செயற்பட்டு வரும் நிலையில் காவல்துறையினரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை கைதி மரணம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை கைதி மரணம்

உயிரிழந்த இளைஞனது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டிய அதேநேரம் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும் என மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.   


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025