கனடாவில் எட்டு மாதங்களுக்கு முன்னர் காணாமற் போன தமிழ் இளைஞர் - காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு(படம்)
கனடாவில் எட்டு மாதங்களுக்கு முன்னர் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்க ரொறன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வெங்கடேஷ் கண்ணதாசன் என்ற 31 வயதான இளைஞரே காணாமற் போனவராவார். இவர் கடைசியாக கடந்தாண்டு செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி காணப்பட்டார்.

Dixon சாலை + Kipling Av பகுதியில் வெங்கடேஷ் கடைசியாக காணப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் வெங்கடேஷை காணவில்லை என நேற்று தான் காவல்துறையில்புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
6 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட வெங்கடேஷ் சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் தாடி வைத்திருப்பார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மூக்கு கண்ணாடியும் வெங்கடேஷ் அணிந்திருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் கவலை கொண்டுள்ளனர்.